-
தந்தனக்கு தந்தனக்கு தனக்கு தந்தானே
Tantaṉakku tantaṉakku taṉakku tantāṉē
Thanthanakku thanthanakku thanakku thanthaane
-
தனக்கு தனக்கு தன தினக்கு தில்லாலே
Taṉakku taṉakku taṉa tiṉakku tillālē
Thanakku thanakku thana thinakku thillaale
-
ஊரான ஊருக்குள்ள தனக்குத் தந்தானே
Ūrāṉa ūrukkuḷḷa taṉakkut tantāṉē
Of all the towns in the land, thanakku thanthaane,
-
எங்கூரு தனியூரு தினக்கு தில்லாலே
Eṅkūru taṉiyūru tiṉakku tillālē
Our town stands out so grand, thinakku thillaale.
-
ஒய்யார ஒலகத்துல தனக்குத் தந்தானே
Oyyāra olakattula taṉakkut tantāṉē
In this whole beautiful world, thanakku thanthaane,
-
ஒசந்தூரு எங்கூரு தினக்கு தில்லாலே
Osantūru eṅkūru tiṉakku tillālē
Our town's the highest pearl, thinakku thillaale.
-
மலையூரு கடலூரு தனக்குத் தந்தானே
Malaiyūru kaṭalūru taṉakkut tantāṉē
Mountain towns, coastal towns, thanakku thanthaane,
-
மச்சூரு மேட்டூரு தினக்கு தில்லாலே
Maccūru mēṭṭūru tiṉakku tillālē
Highland and lowland towns, thinakku thillaale.
-
தலையூரு தமிழூரு தனக்குத் தந்தானே
Talaiyūru tamiḻūru taṉakkut tantāṉē
Capital towns, Tamil towns, thanakku thanthaane,
-
தெக்கூரு மேக்கூரு தினக்கு தில்லாலே
Tekkūru mēkkūru tiṉakku tillālē
Southern and western towns, thinakku thillaale.
-
மாடுகட்டி போரடிச்சா தனக்கு தந்தானே
Māṭukaṭṭi pōraṭiccā taṉakku tantāṉē
If cows get tired of the plow, thanakku thanthaane,
-
பத்தாத வயலூரு தினக்கு தில்லாலே
Pattāta vayalūru tiṉakku tillālē
Fields aren't enough for now, thinakku thillaale.
-
யானகட்டி போரடிச்சு தனக்கு தந்தானே
Yāṉakaṭṭi pōraṭiccu taṉakku tantāṉē
Elephants threshing the grain, thanakku thanthaane,
-
பசியாத்தும் நல்லூரு தினக்கு தில்லாலே
Paciyāttum nallūru tiṉakku tillālē
Good town that feeds the plain, thinakku thillaale.
-
ஆறோடும் வயலோரம் தனக்கு தந்தானே
Āṟōṭum vayalōram taṉakku tantāṉē
Rivers run close to the field, thanakku thanthaane,
-
மானோடும் மலையோரம் தினக்கு தில்லாலே
Māṉōṭum malaiyōram tiṉakku tillālē
Deer run on hills concealed, thinakku thillaale.
-
நதியோட மருந்தோடும் தனக்கு தந்தானே
Natiyōṭa maruntōṭum taṉakku tantāṉē
Medicine flows with the stream, thanakku thanthaane,
-
வீட்டோட வரப்போடும் தினக்கு தில்லாலே
Vīṭṭōṭa varappōṭum tiṉakku tillālē
Ridges by homes that gleam, thinakku thillaale.
-
ஆடுமாடு கோழிகளும் தனக்கு தந்தானே
Āṭumāṭu kōḻikaḷum taṉakku tantāṉē
All of the cattle and hens, thanakku thanthaane,
-
அத்தனையும் நம்மஎனம் தினக்கு தில்லாலே
Attaṉaiyum namma'eṉam tiṉakku tillālē
They are our kindred friends, thinakku thillaale.
-
நாடெல்லாம் மனுசகொலம் தனக்கு தந்தானே
Nāṭellām maṉucakolam taṉakku tantāṉē
All of the human race, thanakku thanthaane,
-
ஒத்துமையா வாழும்நெலம் தினக்கு தில்லாலே
Ottumaiyā vāḻumnelam tiṉakku tillālē
Lives in this peaceful space, thinakku thillaale.
-
ஒருவூரு மட்டுமில்ல தனக்கு தந்தானே
Oruvūru maṭṭumilla taṉakku tantāṉē
It isn't just one single town, thanakku thanthaane,
-
ஒலகமே நம்மூரு தினக்கு தில்லாலே
Olakamē nammūru tiṉakku tillālē
The whole world is our own ground, thinakku thillaale.
-
மாடுபூட்டி விட்டாக்கா தனக்கு தந்தானே
Māṭupūṭṭi viṭṭākkā taṉakku tantāṉē
Yoking the bulls to the cart, thanakku thanthaane,
-
வழியெல்லாம் நம்மூரு தினக்கு தில்லாலே
Vaḻiyellām nammūru tiṉakku tillālē
Every path is our heart, thinakku thillaale.
-
சல்லி குலுங்குதடி தனக்கு தந்தானே
Calli kuluṅkutaṭi taṉakku tantāṉē
Cowbells are jingling loud, thanakku thanthaane,
-
காளத் திமில் துள்ளுதடி தினக்கு தில்லாலே
Kāḷat timil tuḷḷutaṭi tiṉakku tillālē
Bull humps are bouncing proud, thinakku thillaale.
-
வண்டி பூட்டிவிடு தனக்கு தந்தானே
Vaṇṭi pūṭṭiviṭu taṉakku tantāṉē
Tie up the cart and let's go, thanakku thanthaane,
-
வழியெல்லாம் நம்மூரு தினக்கு தில்லாலே!
Vaḻiyellām nammūru tiṉakku tillālē!
Every path is our home, thinakku thillaale!
-
அடுத்தூரு எந்தூரு தனக்கு தந்தானே
Aṭuttūru entūru taṉakku tantāṉē
What is the very next town? thanakku thanthaane,
-
ஆதரிக்கும் நல்லூரு தினக்கு தில்லாலே
Ātarikkum nallūru tiṉakku tillālē
A good town that helps us crown, thinakku thillaale.
-
வெளைஞ்சூரு எந்தூரு தனக்கு தந்தானே
Veḷaiñcūru entūru taṉakku tantāṉē
What is the harvesting town? thanakku thanthaane,
-
வெள்ளாம எந்தூரு தினக்கு தில்லாலே
Veḷḷāma entūru tiṉakku tillālē
A town where the crops abound, thinakku thillaale.
-
கட்டவண்டி போறவழி தனக்கு தந்தானே
Kaṭṭavaṇṭi pōṟavaḻi taṉakku tantāṉē
Path where the tied cart goes, thanakku thanthaane,
-
காச்சவூரு எந்தூரு தினக்கு தில்லாலே
Kāccavūru entūru tiṉakku tillālē
What is the town that glows? thinakku thillaale.
-
மயிலுவண்டி போறவழி தனக்கு தந்தானே
Mayiluvaṇṭi pōṟavaḻi taṉakku tantāṉē
Path where the peacock cart goes, thanakku thanthaane,
-
மணந்தூரு எந்தூரு தினக்கு தில்லாலே
Maṇantūru entūru tiṉakku tillālē
What is the sweet-smelling rose? thinakku thillaale.
-
வண்டிகட்டி போறவழி தனக்கு தந்தானே
Vaṇṭikaṭṭi pōṟavaḻi taṉakku tantāṉē
Path where the wagon rolls on, thanakku thanthaane,
-
வாச்சவூரு எந்தூரு தினக்கு தில்லாலே
Vāccavūru entūru tiṉakku tillālē
What is the blessed town's dawn? thinakku thillaale.
-
வாக்கப்பட எந்தூரு தனக்கு தந்தானே
Vākkappaṭa entūru taṉakku tantāṉē
Town where we go to be wed, thanakku thanthaane,
-
வாகான தெந்தூரு தினக்கு தில்லாலே
Vākāṉa tentūru tiṉakku tillālē
South town where we are led, thinakku thillaale.
-
மும்மாரி பெஞ்சிருக்க தனக்கு தந்தானே
Mummāri peñcirukka taṉakku tantāṉē
Three kinds of rain having poured, thanakku thanthaane,
-
முப்போகம் பொன்வெளைய தினக்கு தில்லாலே
Muppōkam poṉveḷaiya tiṉakku tillālē
Golden crops are our reward, thinakku thillaale.
-
ஒப்பான தெந்தூரு தனக்கு தந்தானே
Oppāṉa tentūru taṉakku tantāṉē
Which is the town that compares? thanakku thanthaane,
-
ஓட்டுங்கடா அந்தூரு தினக்கு தில்லாலே!
Ōṭṭuṅkaṭā antūru tiṉakku tillālē!
Drive to that town right there, thinakku thillaale!